அடுத்த 3 மணி நேரம்.. ரொம்ப முக்கியம்.. பெஞ்சல் வலிமை இழக்கும் அந்த நேரம்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பெஞ்சல் புயல் 3 மணிநேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கரையைக் கடந்த புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்சல புயல் 35 மணி நேரம் பயணித்து இன்று (டிச.01) அதிகாலை 1.30 மணிக்கு மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே கரையை கடந்தது; 11.30 மணிக்கு பெரும்பாலான பகுதிகள் கரையை கடந்தாலும் 1.30 மணிக்கே முழுமையாக அந்த புயலின் பாகம் கரையை கடந்தது. அடுத்த 3 மணி நேரத்தில் இது வலிமை இழக்கும்.

இதனால் அடுத்த 3 மணி நேரம் முக்கியம் ஆகும். ஏனென்றால் இந்த புயல் தற்போது Pull Effect எனப்படும் இழுவை காரணமாக கூடுதலாக மேகங்களை இழுத்து வந்துள்ளது. இந்த மேகங்கள் மழையை கொடுக்கும். இப்படி மழையை கொடுப்பதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல காற்றும், மழையும் நீடிக்கும்.
அதன்பின் இந்த புயல் தாழ்வு நிலையாக வலிமை இழக்கும். தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக வலிமை இழக்கும். அதன்பின் முழுமையாக வலிமை இழக்கும். பெஞ்சல் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் தொடர்ந்து காற்று வீசும். தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பெஞ்சல் புயல் இழுத்து வந்த மேகங்கள் காரணமாக இன்று தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்










Click it and Unblock the Notifications