புரட்டி எடுக்கும் மழை.. நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களுக்கான அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 20 மணி நேரமாக விடாமல் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்த நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக மேற்கண்ட 4 மாவட்டத்திற்கும் அவசரகால உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையை மிதக்க வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்த பருவமழை தற்போது மீண்டும் தீவிரம் பெற்றுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் குறிப்பாக கடந்த 20 மணி நேரமாக நிற்காமல் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இடையிடே கனமழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட இந்த முறை அதிக அளவு மழை பெய்துள்ளது. அதிக மழைப்பொழிவை பெறாத தூத்துக்குடி மாவட்டத்திலும் வழக்கத்திற்கு மாறாக பல்வேறு இடங்களில் வெள்ளம் போல மழை நீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் சென்னையில் ஏற்பட்டதை விட அதிக மழை பொழியும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையமும் நாளை இரவு வரை இந்த 4 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பு கருதி 4 மாவட்டத்திற்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களின் உதவி எண்கள்:
* திருநெல்வேலி - 0462-2501012
* தூத்துக்குடி - 0461-2340101
* கன்னியாகுமரி- 04652-231077
* தென்காசி - 04633-290548
* அவசரகால கட்டுப்பாட்டு மைய எண்: 1070, 1077
* வாட்ஸ் அப் எண்: 9445869848. வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்: இதேபோல் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மழைக்கால அவசர உதவிகளுக்கான உதவி எண்களை அறிவித்து உள்ளார். அதன்படி,
* தூத்துக்குடி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தை 1077,
* மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் 1070,
* மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 104,
* அவசர மருத்துவ உதவிக்கு 108,
* மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம் 94458 54718,
* தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவிக்கு 101 மற்றும் 112
ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications