பலகோடி பொருட்செலவில் கட்டுறாங்களே! சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வேயில்.. புயலால் நடந்த ஷாக் சம்பவம்
சென்னை: பல கோடி பொருட்செலவில் கட்டப்பட்டு வரும் சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வேயில் மிக்ஜாம் புயல் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது.
பெங்களூர் - சென்னை இடையிலான அமைய உள்ள எக்ஸ்பிரஸ் வே அதிக கவனம் பெற்றுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ. 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வழி விரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பெங்களூர் அருகே ஹோஸ்கோட் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை விரைவுச்சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 258 கிலோ மீட்டருக்கு அமைக்கப்படும் விரைவுச்சாலை வழித்தடத்தில் 17 மேம்பாலங்கள் உட்பட 160-க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைகின்றன.

2 மணி நேரம்; முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 2 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும் என்று மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார் .
ஆனால் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை வட்டாரத்தில் விசாரித்ததில், இத்திட்டத்தின்படி பெங்களூர் கோலாருக்கு அருகில் இருந்துதான் எக்ஸ்பிரஸ் வே கணக்கு துவங்குகிறது. அதேபோல் இந்த பக்கம் சென்னை காஞ்சிபுரம் எல்லை அருகே அருகே எக்ஸ்பிரஸ் வே தொடங்குகிறது . இது பசுமையான நேரான சாலையாக இருப்பதால், எக்ஸ்பிரஸ் வழியில் சுமார் 240 கிமீ தூரம் மட்டுமே.
இதில் ஒரு மணி நேரத்தில் 100- 120 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் எளிதாக செல்லலாம். இதனால் இந்த சாலையில் மட்டுமே 2 மணிநேரம் சாத்தியமாகும். ஆனால் சென்னை சிட்டி, பெங்களூர் சிட்டி உள்ளே செல்ல மேலும் 3 மணி நேரங்கள் ஆகலாம். அதனால் இந்த எக்ஸ்பிரஸ் வே பயணம் 2 மணி நேரம் மட்டுமே. மொத்த பயணம் ஆனால் 5 மணி நேரம் இருக்கும் என்கிறார்கள்.
திட்டத்தின் பின்னணி; சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
மழை: பல கோடி பொருட்செலவில் கட்டப்பட்டு வரும் சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வேயில் மிக்ஜாம் புயல் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி, வாலாஜாபேட்டை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இந்த பகுதிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
விடாமல் வீசிய புயல் மற்றும் மழை காரணமாக இங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னைக்கு 90 கிமீ வட கிழக்கிலும், நெல்லூருக்கு 140 கி.மீ. தென் கிழக்கிலும் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் படிப்படியாக தீவிரமடைந்து, வடக்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திர கடற்கரை அருகே மசுலிப்பட்டினம் இடையே கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications