தூத்துக்குடியில் தாறுமாறாக வெளுத்து வாங்கிய கனமழை.. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
தூத்துக்குடி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருவதால், தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, நேற்று பிற்பகல் முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலைகள் முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோயில், சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் வளாகத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் சுமார் 2 முதல் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இரவு முழுவதும் பெய்த கனமழையால், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் வார்டு பகுதி உள்ளிட்ட பல்வேறு வார்டு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், தாழ்வான பகுதிகள் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழை காரணமாக பிற பகுதிகளில் இருந்து ஆற்றுப்பகுதிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 130 அடியைத் தாண்டியதால் ஆற்றில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை காரணமாக, மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 15,250 கன அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 11,060 கனஅடி நீரும் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல், கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், மருதூர், திருவைகுண்டம், ஏரல், ஆத்தூர் பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications