மிக்ஜாம் புயல்: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் உணவு.. அமைச்சர் தகவல்
சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது என்றும், நாளை உணவு பொட்டலங்களுடன் மருத்துவ வசதி தேவைப்பட்டால் அதுவும் செய்யப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கம் சென்னையை வெள்ளத்தில் தத்தளிக்க வைத்தது. மழை விட்டு 24 மணி நேரத்தை கடந்து விட்டது. எனினும், பல இடங்கள் தண்ணீரில் மிதக்கிறது. புறநகர் பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நாலை முதல் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது: மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் ஒன்று புதிதாக வந்துள்ளது. நாளைய தினத்தில் இருந்து மாடிகளில் தங்கியிருப்பவர்களுக்கு வேண்டிய உணவுகள், வேறு விதமான வசதிகள் ஆகியவை வழங்கப்படும். இன்று மாலை இரண்டு இடங்களில் உணவு பொட்டலங்கள் வழங்கியிருக்கிறார்கள்.
நாளை உணவு பொட்டலங்கள் மட்டும் இல்லை அவர்களுக்கு மருத்துவ சேவைகளோ, அல்லது வேறு என்ன தேவை இருக்கும் என்று சொல்கிறார்களோ அதை வழங்குவதற்கு வேண்டிய வேலைகளை செய்ய இருக்கிறோம். மீட்பு பணிகள் எதிர்பார்த்ததை விட வேகமாக நடக்கிறது. அரசு இயந்திரம் முழுவதுமாக இறங்கி வேலை பார்க்கிறது. அமைச்சர்கள் அவரவருக்கு ஒதுக்கிய பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் 250 பேர் வைத்து இருக்கிறோம். இப்போது கூடுதலாக மீட்பு படையினர் கேட்டு இருக்கிறோம். இதன் மூலம் 855 மீட்பு படையினர் வந்து விடுவார்கள். இது தாரளமாக இருக்கும். அதுபோக அடுக்கு மாடி கட்டிடங்களில் சிக்கியிருப்பவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு கொடுக்கும் வேலையை இன்று ஆரம்பித்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications