இரவு முழுக்க மழை கொட்டும்.. சென்னை + 28 மாவட்டங்களில் பெரிய சம்பவம்.. வந்த திடீர் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் உட்பட மொத்தம் 29 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை கொட்டும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை இருக்கும் என்பதால் மக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாகவே நல்ல மழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. மாலை ஆரம்பிக்கும் இந்த மழை நள்ளிரவைத் தாண்டியும் தொடர்வதால் இரவு கூலான ஒரு கிளைமேட் நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். குறிப்பாக சென்னையிலும் கூட மழை இருப்பதால் பெரியளவில் புழக்கம் தெரிவதில்லை.

சென்னை மழை
இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
29 மாவட்டங்களில் மழை
மேலும், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த மழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் என வானிலை மையம் கூறியுள்ளது. எனவே, இரவு டின்னருக்கு வெளியே செல்ல பிளான் செய்திருந்தால் இந்த வானிலை எச்சரிக்கைக்கு ஏற்ப உங்கள் திட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
மழை அலர்ட்
முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில் வங்கக்கடலில் இப்போது அடுத்தடுத்து இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,, "இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளைய தினம் 24-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் செப்டம்பர் 25ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (23-09-2025): வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (24-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications