மழை பிச்சு உதறும்.. அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் சம்பவம் காத்திருக்கு! ஆஹா நோட் பண்ணுங்க
சென்னை: கோடை வெப்பத்திற்குக் குட்டி பிரேக் விடும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் குளிர்ந்து குளிர்ச்சியான வானிலை காணப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை சீசன் விட்டது முதலே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாகக் கடந்த மார்ச் மாதம் முதலே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிப் பதிவாகத் தொடங்கியது. இதனால் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருந்தது.

சட்டென மாறிய வானிலை
இந்தச் சூழலில் இன்று மாநிலத்தின் வானிலை சட்டென மாறியது. இன்று அதிகாலையே சென்னையில் மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த சில வாரங்களாகவே அதீத வெப்பத்தால் துவண்டு போய் இருந்த மக்களுக்கு இதமாக இந்த மழை இருந்தது. மேலும், மழையால் பல இடங்களில் வெப்பமும் குறைந்தது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இரவு 7 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவாரூர், நீலகிரி, தேனி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாகச் சில இடங்களில் நீர் தேங்கலாம் என்றும் சாலைகளிலும் நீர் தேங்கும் என்பதால் டிராபிக் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பிலும் கூட சென்னை உட்பட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வானிலை மையம்
இன்று வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இன்று (16-04-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (17-04-2025) முதல் ஏப்ரல் 22 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (16-04-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான - கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். நாளை (17-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications