நைட் முழுக்க சூறைக் காற்றோடு அடித்து நொறுக்க போகுது மழை.. 15 மாவட்டங்களுக்கு பறந்த வானிலை மைய அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் காலத்தில் வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மாநிலத்தில் பரவலாக மழை கொட்டி வருகிறது. இதற்கிடையே அடுத்த 2 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் சதமடித்தது. அதீத வெப்பத்தால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன. குறிப்பாக சென்னை உட்படக் கடலோரப் பகுதிகளில் ஈரப்பதமும் அதிகரிக்கவே அசவுகரியம் ஏற்பட்டது.

அக்னி நட்சத்திரம்
இந்தச் சூழலில் நேற்று மே 4ம் தேதி மாநிலத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கியது. இதனால் மாநிலத்தில் பரவலாக வெயில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் மாறாகக் கடந்த இரு நாட்களாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலை ஏற்பட்டுள்ளது.
சூறைக்காற்று + மழை
இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இரவு 10 மணி வரை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 30- 40 கிமீ காற்று வீசவும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், மதுரை விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் இந்த மாவட்டங்களில் சில இடங்களில் நீர் தேங்கவும் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருக்கிறது. இது தவிர ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பம்
மழை காரணமாக இன்றைய தினம் மாநிலத்தில் வெப்பம் குறைவாகவே இருந்தது. இன்றைய தினம் வேலூரில் அதிகபட்சமாக 101.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. இது தவிர மதுரை, தொண்டி ஆகிய இரு இடங்களில் மட்டுமே வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருந்தது. அதாவது கனமழையால் வெப்பம் பெரியளவில் குறைந்தே காணப்பட்டது.
வானிலை மையம்
முன்னதாக சென்னை கிளைமேட் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (05-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (06-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications