பேய் காற்று + கனமழை.. சென்னையிலிருந்து புயல் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது! புது அப்டேட்
சென்னை: வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தற்போது சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து புயல் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
"இன்று காலை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் நிலவிய டிட்வா புயலானது, வடதிசையில் நகர்ந்து, இன்று பிற்பகல் 2.30 மணி அளவில், வேதாரண்யத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவிலும் , காரைக்காலுக்கு தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 220 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 330 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இது, தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (30-ஆம் தேதி) அதிகாலை, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும்.
அப்படி வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் பொழுது, வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இருந்து, இன்று நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை(30-11-2025) அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை(30-11-2025) மாலை 25 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல புயல் நெருங்கி வருவதால், மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம், மாதவரம், எழும்பூர், தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி என பரவலாக மழை பெய்து வருகிறது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications