நல்ல காலம் பொறக்குது.. 2 மணி நேரம் இல்லை.. 12 மணி நேரம்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிற்கு வானிலை ரீதியாக நல்ல காலம் பொறக்குது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


ஜெய் ஜக்கமா நல்ல காலம் பொறக்க போகுது !!! உச்ச கோடை வெயில் குறைய போகுது, தமிழ்நாட்டில் நல்ல மழை வர போகுது.

Good days are coming says Tamil Nadu weatherman about rain in the state


நீண்ட நேரம் பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக வடக்கு உள்பகுதியில் வெப்பநிலை குறையும். நேற்று ஹைதராபாத்-கடப்பா புயல் நீண்ட பயணத்திற்கு பிறகு தமிழ்நாட்டை வந்தடைந்தது. சென்னையின் சில பகுதிகளில் சாலையை நனைக்கும் வகையில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வேலூர் ஆம்பூர் பகுதிகளில் மிக கனமழை பெய்ய போகிறது.


இப்போது திருவண்ணாமலையில் மழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன, அங்கு மழை பெய்யும். பொதுவாக இடியுடன் கூடிய மழை 2-3 மணி நேரம் நீடிக்கும். ஆனால் இது 12 மணிநேரம் வரை நீடிக்கிறது , தமிழ்நாட்டின் உட்புறத்தில் வெப்பம் அதிகரித்து உள்ளதால் இந்த மழை இன்னும் பலம் பெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி, பெரம்பாலூருக்கு இதனால் மழை பெய்யுமா என்று பார்க்கலாம், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை மழை: சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நல்ல மழை பெய்துள்ளது.

கடந்த ஒன்றரை மாத வெயிலுக்கு இடையில் திடீரென அதிகாலையில் மழை பெய்துள்ளது. தெற்கு சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்தது. தென் சென்னையில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

இன்று அதிகாலை கிண்டி கோட்டம் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தாலுகாக்களை உள்ளடக்கிய பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் மழை தொடங்கியது.

5 - 6 மணி வரை மழை விடாமல் நீடித்தது. 6 மணி தாண்டியும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இந்த திடீர் மழை பெய்துள்ளது. பெங்களூரில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

ஹைதராபாத்தில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதிலும் நேற்று ஹைதராபாத்தில் பெய்த மழைக்கு இடையே சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. நேற்று இரண்டு மணி நேரம் அங்கு விடாமல் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக ஹைதராபாத்தில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது.

வானிலை மைய அறிவிப்பு: கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி) தலா 6, பையூர் AWS கிருஷ்ணகிரி), நெங்கல்
(கிருஷ்ணகிரி), பாளர் கிருஷ்ணகிரி தலா 5. ஆம்பூர் இகுப்பத்தூர்). மேலாலத்தூர் (வேலூர்).
தர்மபுரி (தர்மபுரி), தர்மபுரி PTD (தர்மபுரி, வாணியம்பாடி (திலப்பத்தூர்), நாட்றாம்பள்ளி
(திருப்பத்தூர்) தலா 4 வகேனக்கல் (தர்மபுரி), வடபுதுப்பட்டு (நிலப்பத்தூர்). உயனாமரத்தூர்
(இவைண்ணாமவை), டேனிஷ்பேட்டை (சேலம்) கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி),
கிருஷ்ணகிரி (சியஷ்ணகிரி), அவர் (தர்மபுரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கெலவரப்பள்ளி
அணை கிருஷ்ணகிரி) குடியாத்தம் (வேலூர்), கண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 3, மேட்டூர்
(சேலம்), நடுவட்டம் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு) TCS மில் கேதாண்டபட்டி
(நிலப்பத்தூர்),எம்புவட்டப்பட்டி (கிகஷ்ணகிரி பாலவிதிர்) சேலம் (சேலம்), பாம்பார்
அணை (கிருஷ்ணகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு) தாலுகா அலுவலகம் திருப்பத்தூர்
(நிலப்பந்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), போச்சம்பள்ளி ARG (கிஸஷ்ணகிரி),ஓமலூர்
(சேலம்), திருப்பூர் PWD (இலப்பூர்) தலா 2 மிமீ மழை பெய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+