அடுத்து 3 மணி நேரம்.. தமிழகத்தில் 21 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை! சம்மரிலும் ஜில் ஜில் கிளைமேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. கோடைக் காலத்தில் பெய்யும் இந்த திடீர் மழையால் வெப்பம் குளிர்ந்து, குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாகத் தமிழ்நாட்டில் மே மாதம் கோடைக் காலம் வெப்பம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த முறை கிளைமேட் மொத்தமாக மாறியிருக்கிறது. மே மாதம் தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓரிரு இடங்களில் வெப்பம் அதிகரித்தாலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மழை குறைவாகவே இருக்கிறது.

21 மாவட்டங்களில் கொட்டும் மழை
இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணிக்குள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எந்த மாவட்டங்கள்?
மேலும், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, ஈரோடு, தென்காசி, கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோடைக் காலத்தில் வெப்பம் உச்சத்தில் தான் இருக்கும். ஆனால், மாலை நேரங்களில் பெய்யும் இதுபோன்ற மழை வெப்பத்தைக் குறைக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்தக் கோடை மழையை வரவேற்கிறார்கள். இன்று 21 மாவட்டங்களிலும் புதுவையிலும் மழை பெய்யும் என்பதால் வெப்பமும் பரவலாகக் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை மையம்
முன்னதாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "இன்று, தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் துவங்கியது. அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (13-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 2-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications