அடுத்த 2 மணி நேரம் நான்ஸ்டாப் மழை.. மொத்தம் 11 மாவட்டங்களில் நல்ல சம்பவம்! வானிலை மையம் பரபர அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு, அதாவது இரவு 7 மணி வரை நெல்லை, கோவை உட்பட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இரண்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்து பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

நேற்றைய தினம் மூட பாலக்கோடு (தர்மபுரி), காட்பாடி (வேலூர்) பகுதிகளில் அதிகபட்சமாக 140மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல விழுப்புரம் (விழுப்புரம்) 130 மிமீ மழை, நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 120 மிமீ மழை பெய்துள்ளது.
அடுத்த 2 மணி நேரம்: இன்றைய தினமும் கூட மாநிலத்தில் பல இடங்களில் மழை தொடரும் என்றே கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே அடுத்த 2 மணி நேரத்திற்குக் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்காக அந்த இரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் மழை நீர் தேங்கலாம் என்றும் சில இடங்களில் டிராபிக் பாதிப்பும் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்றைய தினம் ஆக. 12ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அலர்ட்: நாளைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications