Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்கிரமாகும் வெப்ப அலை.. வட தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வெப்பம் அனலை கக்கி வருகிறது. வாட்டி வதைக்கும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால், மக்கள் மதிய நேரங்களில் வெளியில் செல்லவே பயப்படுகின்றனர்.

Heat wave Temperature will rise up to 3 degrees Celsius in North Tamil Nadu for the next 5 days

இதனால், மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையமும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் அதிகரித்து காணப்படும் என்றும், தென் இந்திய பகுதிகள், மத்திய, வடமேற்கு இந்திய பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது என்று கூறி இருந்தது.

5 டிகிரி அதிகரிப்பு: அதன்படியே, தற்போது தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. கத்தரி வெயில் தொடங்கும் முன்பே தமிழ்நாட்டில் பல இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 நாட்களுக்கு வெயில்: சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இன்று முதல் 5 நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை, தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் அளவு: தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் பொதுவாக இயல்பை விட 3° -4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.2° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், சேலத்தில் 41.0° செல்சியஸ், வேலூரில் 40.8° செல்சியஸ், திருச்சியில் 40.6° செல்சியஸ், மதுரை விமானநிலையம் & திருப்பத்தூரில் 40.2° செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

குமரியில் 4 செ.மீ மழை: இதேபோல் நேற்று கன்னியாகுமரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரியின் திற்பரப்பில் 4 செமீ மழை பெய்தது. இதேபோல், குமரியின் பேச்சுப்பாறை, பூதப்பாண்டி, பாலமோர், அணைகெடங்கு முக்கடல் அணை, மாம்பழத்துறையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதேபோல் ஈரோடு தாளவாடியிலும், கோவை சோலாயரிலும் மழை பெய்தது.

5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: இன்று முதல் 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தேனி, திருச்சி, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+