heat wave in Tamil nadu: தமிழகத்தில் ஏப்.15 வரை வெப்பம் கடுமை! 7 இடங்களில் சென்சுரி அடித்த கொடுமை!
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது.
வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது கோடைக் காலம் தொடங்கிவிட்டது. பிப்ரவரி மாதத்தில் 75 சதவீத நாட்களில் குளிர் வாட்டி எடுத்தது. காலை நேரத்தில் மூடுபனியும் இருந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து வந்தது.

இந்த நிலையில் அந்த பனிகாலம் முடிவடைந்து தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே ஜூஸ் கடைகள் எல்லாம் முளைக்கத் தொடங்கிவிட்டன. அது போல் கேழ்வரகு கூழ், கம்மங்கூழ் விற்பனையகங்களும் தொடங்கப்பட்டன.
இளநீர் கடைகள், கரும்பு சாறு கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. இங்கெல்லாம் இப்போதே மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வீடுகளில் ஏசி ஓடியது ஓடியபடி இருந்து வருகிறது. மார்ச் ஆரம்பத்திலேயே இப்படி என்றால் இன்னும் ஏப்ரல், மே மாதங்களை நினைத்தால் தலையே சுற்றுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் அதுவும் அக்னி வெயிலை மழை பெய்து தணித்தது. அது போல் இந்த முறையும் வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சிகள், வெப்பச்சலனம் உள்ளிட்டவைகளால் மழை பெய்தால் வெயில் அதிகம் இருக்கும் ஊர் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அது போல் ஒரு சில இடங்களில் வெயில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஈரோடு, கரூர் பரமத்தியில் 102 டிகிரி பாரன்ஹீட்டும் சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம், சேலம், திருப்பத்தூர், திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருந்தது.
சென்னையில் நடப்பு ஆண்டின் முதல் முறையாக நேற்றுதான் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் இருந்தது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை தொடரும். இதில், ஒரு சில இடங்களில், அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications