"55 மணி நேரம்.." மேக வெடிப்பால் ஒரு நிமிடம் கூட விடாமல் கொட்டும் கனமழை! இமாச்சலில் 7 பேர் உயிரிழப்பு
தர்மசாலா: இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மேக வெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டி வரும் நிலையில், அம்மாநில மக்கள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் பருவமழை காரணமாகக் கனமழை கொட்டி வருகிறது. தமிழ்நாட்டில் பெரியளவில் மழை இல்லை என்ற போதிலும் இந்தியாவின் பிற பகுதிகள் முழுக்க கனமழை கொட்டி வருகிறது.

அதிலும் குறிப்பாக ஹிமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குப் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேக வெடிப்பு: இதற்கிடையே மேக வெடிப்பு காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள சோலன் மாவட்டம் ஜாடோன் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கனமழையால் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு மாட்டுக் கொட்டகை அப்படியே அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேக வெடிப்பு காரணமாக 7 பேர் உயிரிழந்ததற்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த சோதனையான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். மழைக் காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
55 மணி நேரமாக மழை: இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் கடந்த 55 மணி நேரமாக ஒரு நிமிடம் கூட விடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்குள்ள மண்டி, சிர்மவுர், சிம்லா, ஹமிர்பூர், பிலாஸ்பூர் மற்றும் சோலன் ஆகிய இடங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்து பல வீடுகள் ஆபத்திலும் உள்ளன.
இதனால் கல்கா-சிம்லா, சண்டிகர்-மனாலி, சிம்லா-தரம்ஷாலா, பௌண்டா-ஷிலை என முக்கிய நெடுஞ்சாலைகள் உட்பட மாநிம் முழுக்க உள்ள 800+ சாலைகள் மூடப்பட்டுள்ளன.. மேலும் இதனால் 2,000க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழையால் அங்குப் பல இடங்களில் மக்கள் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எச்சரிக்கை: அங்குக் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பியாஸ், பாங் அணை, ரஞ்சித் சாகர் மற்றும் சட்லஜ் நதிகளின் அருகில் உள்ள பகுதிகளில் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை வரை மொத்தம் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சுகு அனைத்து மாவட்ட ஆணையர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இன்று அங்குப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது வரை 7 பேர் இந்த வெள்ளத்தால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications