பெரிய ஆரஞ்சு.. இன்னைக்கு சம்பவம் உறுதி! வெளுக்கப் போகும் மழை.. ஹை அலர்ட்டில் 4 மாவட்டங்கள்! கவனம்!
சென்னை: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக நான்கு மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
.
தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பணியின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஜனவரியில் சில பகுதிகளில் உறைபனி கூட நிலவும். தற்போது பிப்ரவரி முடிந்திருக்கும் நிலையில், கோடைக்காலம் தொடங்கிவிட்டது.

இரவில் கடுமையான பனிப்பொழிவும் பகலில் கடுமையான வெயிலும் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் இயல்பை விட வெயில் அதிகமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
தமிழகத்தை பொறுத்தவரை பகலில் அதிக வெயிலும் இரவில் பனியின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. சென்னை கன்னியாகுமரி, கரூர், தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெயில் இயல்பை விட சற்று குறைவாகவே இருந்தாலும்.வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக நான்கு மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளிலும், காரைக்கால் பகுதியிலும் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகலாம்.
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். மேலும் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் மழை பெய்யும் நேரங்களில் பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ மரத்தின் அருகிலோ செல்ல வேண்டாம். தண்ணீர் தேங்கிய இடங்களில் பொதுமக்கள் இறங்க வேண்டாம். துண்டித்து விழுந்த மின் கம்பிகள், பழுதுபட்ட பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள். அரசு தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறும் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications