heavy rain: இன்னைக்கு கனமழை வெளுக்கப்போகுது! வட மாவட்ட மக்கள் உஷார்! வானிலை மையம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தீவிரமெடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஆக.9) வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதாவது, "தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

rain chennai tamil nadu

இன்று வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக

  • தர்மபுரி
  • கிருஷ்ணகிரி
  • திருப்பத்தூர்
  • ஈரோடு
  • சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆக.10ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆக.11 முதல் 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (09-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை சுமார் 151.7 மில்லி மீட்டர் அளவுக்கு சராசரியாக மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பான மழையை விட 13% குறைவாகும். வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை 199.5 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 25% அதிகமாக இருந்தாலும், விழுப்புரத்தில் 42%, திருவாரூரில் 58%, தூத்துக்குடியில் 55%, திருப்பத்தூரில் 47%, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 54%, கன்னியாகுமரியில் 45%, தர்மபுரியில் 53% என மழை இயல்பை விட குறைவாக பதிவாகி இருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+