பேய் மழை வெளுக்கப் போகுது.. திருவாரூர், நாகப்பட்டினத்துக்கு ஆரஞ்சு அலெர்ட்.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இன்று மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையையும் சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இன்று மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில், ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை) கிழக்கு தென்கிழக்கே சுமாா் 410 கி.மீ. தொலைவிலும், மட்டகிளப்புக்கு (இலங்கை) கிழக்கு, தென்கிழக்கே 420 கி.மீ. தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 810 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 980 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 36 மணி நேரத்துக்கு, மேற்கு-வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் வழியாக நகா்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகளில், ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனைக்கு இடையே இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கக் கூடும். இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இன்று முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆரஞ்சு எச்சரிக்கை
அதேபோல, திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் உறைபனி
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் ஓரிரு இடங்களில் இன்று அல்லது நாளை அதிகாலை வேளைகளில் உறைபனி நிலவும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல, தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலிலும், தென்கிழக்கு வங்கக்கடலிலும் மேற்குறிப்பிட்ட நாள்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications