Chennai Rain: இன்னைக்கு நைட்டு ஃபுல்லா மழை விடாது.. சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் நேற்று மழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நாமக்கல், குமரி, சேலம், கோவை, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இன்று செங்கல்பட்டு உள்பட இரு மாவட்டங்களில் கனமழை கொட்டும் என வானிலை மையம் கூறியுள்ளது.

heavy-rain-all-night-alert-issued-for-chennai-chengalpattu-and-3-other-districts-imd

அடுத்த ஒரு மணி நேரம்

இதற்கிடையே அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் நெல்லை, தென்காசி, கோவை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக மதியம் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை (30-09-2025), வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக, வருகின்ற 01-10-2025 அன்று, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்

29-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 01-10-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

4 ஆம் தேதி வரை மழை தான்

02-10-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

03-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04-10-2025 மற்றும் 05-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (29-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (30-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழை அளவு செமீ

* தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 4,
* ஏற்காடு (சேலம்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), மங்களபுரம் (நாமக்கல்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 3,

* தேவாலா (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பெரியாறு (தேனி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்). சோலையார் (கோயம்புத்தூர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 2, டேனிஷ்பேட்டை (சேலம்),

* சின்கோனா (கோயம்புத்தூர்), தக்கலை (கன்னியாகுமரி), திருக்கண்ணூர் (புதுச்சேரி). கூடலூர் பஜார் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), மேல் கூடலூர் (நீலகிரி). குண்டாறு அணை (தென்காசி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), ஆனைமடுவு அணை (சேலம்), அணைகெடங்கு (கன்னியாகுமரி). வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: 29-09-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

30-09-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

01-10-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02-10-2025 மற்றும் 03-10-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

29-09-2025 முதல் 30-09-2025: மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய தெற்கு வங்கக்கடலின் ஏனைய பகுதிகள், ஆந்திரா கடலோரப்பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+