உக்கிரம் காட்டும் வெயிலுக்கு இடையே ஜில் அப்டே.. காலையிலேயே 5 மாவட்டங்களில் மழை கொளுத்தும்!
சென்னை: கோடை வெயிலுக்கு இடையே நேற்று தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கொட்டிய கனமழையால் தென்காசியில் வெப்பம் தணிந்து குளிர்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், காலை 10 மணி வரை தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நேற்று தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக தென்காசி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கொட்டிய கனமழையால் தென்காசி மாவட்டமே நேற்று மாலை ஜில் கிளைமேட்டாக மாறியது.

காலை 10 மணி வரை
அனலால் தகித்து வந்த தென்காசி மாவட்டம் நேற்று மாலை குளிர்ந்து காணப்பட்டது. இதேபோன்று நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள், குமரியில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று காலை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடக்கு சத்தீஸ்கர் முதல் குமரிக்கடல் வரை தெலுங்கானா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இடி, மின்னலுடன் மழை கொட்டும்
இதனால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
23-04-2026 முதல் 25-04-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக
கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
26-04-2026 மற்றும் 27-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர
மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று முதல் 25-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் இன்று கிளைமேட் எப்படி?
சென்னையில் இன்று (22-04-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்." என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications