இன்னைக்கு சம்பவம் தான்! அடுத்த 3 மணி நேரம்.. வெளுத்து வாங்க போகும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை வெளுத்து வாங்கும் என்றும், இடி மற்றும் மின்னலுடன் இந்த மழையானது பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைபகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தென்காசி, நெல்லை, நீலகிரி, குமரி, திருப்பூர், கோவை மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் லேசானது முதல் கனமழை வரை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் தென்காசி, செங்கோட்டை, கடையம், புளியரை, கடையநல்லூர், பாவூர்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் கோவை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது.
இதன் காரணமாக இன்று காலையில் இருந்தே லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டஙக்ளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications