நாமக்கல் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. ராசிபுரத்தில் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. ஊட்டி பிங்கர்போஸ்ட், காந்தல், ரோகிணி, தலைகுந்தா உள்ளிட்ட இடங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது.

அதேபோல, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், மெட்டாலா, வடுகம், புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் கனமழை பெய்திருந்தது. ராசிபுரத்தில் 2வது நாளாக இன்று பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மழை நீர் அதிகளவில் தேங்கியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கீழ்கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 11 செ.மீ மழையும், விண்ட் வொர்த் எஸ்டேட் பகுதியில் 10 செ.மீ, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், தக்கலை ஆகிய இடங்களில் தலா 9 செமீ மழையும் பெய்துள்ளது. கன்னியாகுமரி, ஆத்தூர் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழை, ராசிபுரம் , உசிலம்பட்டி, நீடாமங்கலம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.

இன்று இரவு 7 மணி வரை 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications