மதுரையில் கனமழை.. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 2 விமானங்கள்.. பத்திரமாக தரையிறக்கம்
மதுரை: மதுரையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக 2 விமானங்கள் விமான நிலையத்தில் இறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. தொடர்ந்து அரை மணி நேரம் வானில் வட்டமடித்த இரண்டு இண்டிகோ விமானங்களும் தற்போது மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கின.
சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வந்த நிலையில் தற்போது பத்திரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் 2 நாட்களாக சென்னையை மழை மிரட்டியது. தொடர்ந்து கோவை, திருப்பூரில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று மதுரை அருகே நல்ல மழை பெய்து வருகிறது. இரவு முதல் மதுரையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருச்சியில் ஒருசில இடங்களிலும், காரைக்குடியிலும் இரவு மழை பெய்தது. இந்த நிலையில் தான் கனமழை காரணமாக சென்னையில் இருந்து வந்த விமானம் ஒன்று மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் இண்டிகோ விமான வானில் வட்டமடித்தது. மோசமான வானிலை காரணமாக இந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்ட படியே பறந்தது.
இதையடுத்து பெங்களூரில் இருது வந்த மற்றொரு இண்டிகோ விமானமும் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட தொடங்கியது. தொடர்ந்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின் படி இரண்டு விமானங்களும் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்காமல் வானில் வட்டமடித்தனர். சுமார் அரை மணி நேரமாக வானில் வட்டமடித்து வந்த விமானங்கள், பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications