சென்னை உள்பட வடமாவட்டங்களில் இன்று குறுகிய நேரத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும்.. வானிலை ஆய்வாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இந்நிலையில் வட இந்திய பகுதிகளில் வீசும் வறண்ட காற்று, காற்று சுழற்சியால் வீசும் வடகிழக்கு காற்று ஆகியவற்றால் காற்று குவிதல் ஏற்பட்டு வட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கிய நிலையில், தற்போது அது தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்த வகையில் வட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் வந்துள்ளன.

weather rain chennai

வட இந்திய பகுதிகளில் வீசும் வறண்ட காற்று, காற்று சுழற்சியால் வீசும் வடகிழக்கு காற்று ஆகியவற்றால் காற்று குவிதல் ஏற்படும் எனறும். இதன் காரணமாக மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. இதன்படி இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், சில கடலோரப் பகுதிகளில் மிக கனமழையும், நாளை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யக் கூடும் எனவும், குறிப்பாக குறுகிய நேரத்தில் மழையை கொட்டித் தீர்க்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறினார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. நாளை கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் .

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகள் ஆகியவற்றில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சனிக்கிழமை அன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெற்ற வாய்ப்பு உள்ளது" என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+