இருக்கு.. இங்கெல்லாம் நல்ல மழை இருக்கு! இந்த 3 மாவட்டமும் இன்று அலர்ட்டா இருங்க.. தமிழகத்துக்கே ஜாலி
சென்னை: இன்று முதல் வருகிற 22ம் தேதி வரை தமிழகத்துக்கு பலத்த மழை வாய்ப்பு இருப்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அத்துடன் இன்றைய தினம் மட்டும், 3 மாவட்டங்களுக்கு கனத்த மழை பெய்ய போவதாகவும் வானிலை மையம் அலர்ட் செய்திருக்கிறது.
இந்த வருடம் கோடை மழை சற்று தாமதமாகவே பெய்யத்தொடங்கியது.. எனினும், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது..

மழை: அதாவது, கடந்த வாரத்தில் இயல்பைவிட 60 முதல் 80 சதவீதம் வரை கோடை மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு பிறகு மழை பெய்தபடியே உள்ளதால், இயல்பைவிட 30 சதவீதம் குறைவு என்ற நிலைக்கு வந்துவிட்டது.. இதனால் வெப்பமும் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி கொண்டிருக்கிறது.
குறிப்பாக சென்னையிலும் நல்ல மழை பெய்து வருகிறது.. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று நேற்றைய தினம், வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்திருநதார்.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதால், வெளியே செல்பவர்கள் ரெயின் கோட் எடுத்துச் செல்லும்படியும் வெதர்மேன் கேட்டுக் கொண்டிருந்தார்.
அறிவிப்பு: இந்நிலையில், வருகிற 22ம் தேதிவரை தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் அறிவித்திருக்கிறது.
இந்த மழை மேலும் தொடரும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால பகுதிகளிலும் மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை பெய்யும்: இதுதவிர, இன்று முதல் 21-ந் தேதி வரை சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.. இதில், இன்றைய தினம், தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய போகிறதாம்..
அதேபோல, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை: இதுகுறித்து வானிலை மையம் அறிவிப்பில் மேலும் உள்ளதாவது: "நாளைய தினம் (ஞாயிறு), கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
21ம் தேதி வரை மழை: 21-ந் தேதி நெல்லை, தென்காசி, தேனியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகமொத்தம், 21 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய போவது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது. இதனிடையே, வரும் 20-ந் தேதி நெல்லை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எச்சரிக்கையானது தற்போது எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்: அதற்கு பதிலாக, அங்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கையும், மிக கனமழை பெய்யும் இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications