குடையை மறந்துடாதீங்க! சேலம் டூ குமரி வரை.. 10 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்.. சென்னைக்கு டமால் டூமில்
சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசி, சேலம், குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நேற்று மழை பெய்தது. இன்று சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இதன்படி, இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
இதேபோல் நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று நாளை கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 19 ஆம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த் 48 மணி நேரத்திற்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வானிலை மைய அறிவிப்பின் படி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது. ஆவடி, முகப்பேர், அமைந்தகரை பகுதிகளில் மதியம் 1 மணியளவில் மழை பெய்தது. இதேபோன்று பூந்தமல்லி, மாங்காடு பகுதிகளில் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications