வெடிச்சு கொட்டும் மேகம்.. தீபாவளிக்கு இன்று 15 மாவட்டங்களில் மழை.. பெங்களூரிலும் வெளுத்து வாங்குமாம்
சென்னை: தமிழகத்தில் இன்று அக்டோபர் 31ம் தேதி 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே சென்னையில் வெவ்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கனமழை: இதன் காரணமாக, நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.. வருகிற நவம்பர் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர பகுதிகளின் மேல், தென்மேற்கு அரபிக் கடலின் மேல் என, இரண்டு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று அக்டோபர் 31ம் தேதி தீபாவளி நாளில், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
வானிலை மையம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திடீரென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..
மாவட்டங்களில் மழை : அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தது. வானிலை மையம் அறிவித்திருந்தபடியே, மேற்கண்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளையும் மழை: நாளைய தினம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையமும் சில முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.. இதுதொடர்பான அறிவிப்பில், "இன்று அக்டோபர் 31 முதல் நவம்பர் 4 வரை தெற்கு உட்புற மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலான மழை பெய்யக்கூடும். பெங்களூருவில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
தீபாவளி மழை: மேலும் கோலார், சிக்கபல்லபூர், பெங்களூரு ரூரல், துமகுரு, ஹாசன், மாண்டியா, சிக்கமகளூரு, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். உத்தர கன்னடா, பெலகாவி, தர்வாத், பிடார் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். அக்டோபர் 31 தீபாவளி நாளன்று சிக்கமகளூரு, ஷிமோகா ஆகிய மாவட்டங்கலில் கனமழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
உத்தர கன்னடா, உடுப்பி, தக்ஷின கன்னடா, கோலார், சிக்கபல்லபூர், ராமநகரா, பெங்களூரு ரூரல், பெங்களூரு சிட்டி, தும்குரு, மைசூரு, சித்ரதுர்கா, ஹாசன், மாண்டியா, தாவனகரே ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் பரவலான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தலைநகர் பெங்களூருவில் தீபாவளி அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெங்களூருவில் மழை: லேசான மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகாலை நேரத்தில் சில இடங்களில் லேசான பனிக்கு வாய்ப்பிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என பதிவாகக் கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று பெங்களூருவில் தீபாவளிக்கு மழைக்கு அதிக வாய்ப்புள்ளது தெரிகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications