அடுத்த 1 மணி நேரம்! விழுப்புரம் டூ விருதுநகர் வரை.. 17 மாவட்டங்களில் கனமழைக்கு சான்ஸ்! ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கடலூர், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த வாரம் சென்னையில் பரவலாக பெய்த மழை, அப்படியே ஷிப்ட் மாறி கோவை மற்றும் திருப்பூர் பக்கம் மாறியது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கோவை நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது.

இதேபோன்று தென் தமிழகத்தில் நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சை, சிவகங்கை, குமரி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
நேற்று (23-10-2024) மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த "டானா புயல்", வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இரவு 23.30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது.
இதனால் இன்று தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக். 26ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் அக். 27 முதல் அக். 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications