அடுத்த 2 மணி நேரத்துக்கு விடாமல் கொளுத்த போகும் மழை! நெல்லை, தென்காசி உள்பட 5 மாவட்டங்களுக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கும், மற்ற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இனி லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே மாதம் தொடங்கியதும் பெய்யத் தொடங்கிய மழை மாதம் முழுக்கவே தொடர்ந்தது என்றே சொல்லலாம். இடையிடையே சில நாட்கள் வெயில் அடித்தாலும் அதன் பிறகு தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை கொட்டி வந்தது.

heavy-rain-to-continue-for-the-next-2-hours-alert-issued-for-5-districts-including-nellai-and-tenk

அடுத்த 2 மணி நேர அப்டேட்

நேற்று வரை தென்காசி, நெல்லை, தேனி, குமரி, கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை கொட்டியது. இந்த நிலையில் இன்று காலையில் தமிழகத்தில் டோட்டலாக கிளைமேட் மாறியது. கடந்த ஒரு வாரமாக சூரியன் தெரியாமலே இருந்த நிலையில் இன்று காலை முதலே வெயில் கொளுத்தியது.

தென்காசி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. இதற்கிடையே மீண்டும் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

5 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி, 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் 2 நாளைக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (01-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையில் நாளை (02-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-3 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழை அளவு (செமீ)

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நாலுமுக்கு (திருநெல்வேலி) 2, நெய்யூர் AWS (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), (கோயம்புத்தூர்), வால்பாறை PTO உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது.

வெப்பநிலை நிலவரத்தை பொறுத்த அளவில், அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 37.7° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 22.0° செல்சியஸும் வெயில் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+