டெல்டாவுக்கு பறந்த ஆரஞ்சு+மஞ்சள் அலர்ட்! காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மற்றும் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் தமிழ்நாட்டிற்கு போதுமான மழைப்பொழிவை கொடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கோவை, நீலகிரி தொடங்கி தென்காசி, கன்னியாகுமரி வரை போதுமான அளவுக்கு மழையை கொடுத்தது. ஆனால் தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை இல்லை. கோவையில் மழை கொட்டி தீர்க்க, நாகை, தஞ்சையில் வெளியில் 100 டிகிரி அளவுக்கு கொளுத்தி எடுத்தது.

இப்படி இருக்கையில் அக்டோபர் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இது, சென்னை தொடங்கி வங்கக்கடல் ஓரம் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மழையை கொடுத்தது. குறிப்பாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை மற்றும் தூத்துக்குடி வரை மழை வெளுத்து வாங்கியது.
தற்போது மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, மேற்குறிப்பிட்ட வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரலாக மழை பெய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு காலை 7 மணி வரை ஆரஞ்சு அலர்ட்டும் தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications