இன்னைக்கு மட்டுமில்லை.. அடுத்த 2 நாட்களுக்கு சென்னைக்கு அதி கனமழை தான்.. பாலச்சந்திரன் பேட்டி
சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார். மழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் என்றும் அவர் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. 42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது.

இன்று தென் மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று உள்ளது.
இது தொடர்ந்து அந்த பகுதியில் நிலவுகிறது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும். மழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு தொடரும். மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழையை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய கூடும். விழுப்புரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்னாமலை,, புதுச்சேரி, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருப்பத்தூர், தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 17 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications