அடுத்த 1 மணி நேரம்.. சென்னை டூ மதுரை வரை.. டமால் டுமீலுடன் 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை முதல் மதுரை வரை 25 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் அடித்தாலும் கொஞ்ச நேரத்தில் கிளைமேட் மாறி மழை பெய்கிறது. ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது. இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் நல்ல மழை பெய்தது.

rain chennai

தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக இன்று மழை பெய்தது. மதியம் 2 மணியளவில் இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரித்தது. குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோன்று கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மற்றும் செங்கல்பட்டு ஆகிய 21 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதேபோல் இன்று இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழைக்கான மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கான அறிவிப்பில், "தென் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நேற்று (21-10-2024) மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுந்த நாழ்வு பதியாக வலுப்பெற்று மேற்கு- வடமேற்கு திசையில் நகர்த்து, இன்று (22-18-2024) காலை 05.30 மணி அளவில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.


அதே பகுதிகளில் பார்தீப்பிற்கு (ஒரிசா) தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்ன தென்கிழக்கே 750 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு தென்கிழக்கே 730 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், 23-ஆம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும்.


இது வடக்கு ஒரிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24 ஆம் தேதி இரவு 25 ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி கோயம்பத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி கோயம்புத்தூர். திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 14.35° GF செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+