டமால் டுமீல்.. நள்ளிரவு முதல் சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. 3 மாவட்ட மக்களுக்கு குடை அவசியம்
சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை எம்.ஆர்.சி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த வாரங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் நேற்றைய தினம் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என நேற்று தெரிவித்திருந்தது. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே நேற்றைய தினம் மாலை முதலே மழை பெய்து வருகிறது.
கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், போரூர், ஆவடி, பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது. பலத்த மழை காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பதிவாகும் என தெரிவித்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. எம்.ஆர்.சி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தேனாம்பேட்டை, ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications