அடுத்த 1 மணி நேரம்.. தமிழகம் முழுக்க 32 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுக்க போகுது.. சென்னைக்கும் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலையிலேயே மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் இடி, மின்னலுடன் 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், நெல்லை, குமரி என தமிழகம் முழுக்க மழை பெய்ய உள்ளது. இதேபோல் இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்த நிலையில் இன்று காலையிலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 1 மணி நேரத்தில் தமிழகம் முழுக்க 32 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

heavy-rain-with-thunderstorms-expected-across-32-districts-in-the-next-hour-alert-issued-for-chenn

அடுத்த 1 மணி நேரம்

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய 26 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதேபோன்று இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதியம் 1 மணி வரை

இதன் பின்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மதியம் 1 மணி வரை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் குமரி ஆகிய 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது.

இன்று எங்கெல்லாம் கனமழைக்கு சான்ஸ்

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடல் பகுதிகளிலொ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளையும் கோவை, நீலகிரி மாவட்டத்தில் கனமழக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இத்போல் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.

நாளை சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. லேசான இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். வரும் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+