Heavy Rain: நைட்டிலும் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்க போகுது கனமழை.. 12 மாவட்டங்களுக்கு இரவோடு இரவாக அலர்ட்
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை கொட்டி வருகிறது. அடுத்த 2 மணி நேரத்தில் இரவு 10 மணி வரை மழை தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகளிலும், ஸ்ரீ விஜயபுரம் உட்பட அந்தமான் தீவுகளின் சில பகுதிகளிலும் துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இரவு 10 மணி வரை
அதே சமயம் கேரள பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கக்கூடும் என கணித்துள்ளது. நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடலூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளது. முன்னதாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
நாளை கனமழை வெளுக்கும்
தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல், மதுரை கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18 ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
19 ஆம் தேதி திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
நாளை முதல் 20 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
சென்னையில் நாளை கிளைமேட் எப்படி?
சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், அதிகபட்சம் 35-36° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பதிவான மழை அளவு:
* புதுச்சேரி AWS (புதுச்சேரி) 8 செமீ,
* புதுச்சேரி (புதுச்சேரி) 7 செமீ,
* நியூ சென்னை டவுன்ஷிப் AWS (செங்கல்பட்டு) 5 செமீ,
* ஊத்து (திருநெல்வேலி) 4 செமீ,
* பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 3 , பத்துக்கண்ணு (புதுச்சேரி) 3, விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 3, சிவகிரி (தென்காசி) 3, நாலுமுக்கு (திருநெல்வேலி) 3, பரங்கிப்பேட்டை (கடலூர்) 3, தேக்கடி (தேனி) 3, கோடநாடு (நீலகிரி) 3, காக்காச்சி (திருநெல்வேலி) 3, தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்) 3, அண்ணாமலை நகர் (கடலூர்) 3, மரக்காணம் (விழுப்புரம்) 3, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 3 செமீ,
* பாகூர் (புதுச்சேரி) 2, வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 2, வானூர் (விழுப்புரம்) 2, திருக்குவளை (நாகப்பட்டினம்) 2 செமீ மழை பெய்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications