4 மணி வரை ரொம்ப முக்கியம்.. 14 மாவட்டங்களில் ஆரஞ்ச் பூதம்! வீட்டுக்கு நனையாம போக முடியாது மக்களே!
சென்னை: தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடியுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. மாலை 4 மணி வரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை துவங்கியது.

வழக்கமாக தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் மட்டுமே இந்த பருவத்தில் மழை பெய்யும் என்றாலும் தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அடிக்கடி தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக மதுரையில் ஒரே நாளில் பத்து சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் இந்த வாரமும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. குறிப்பாக தேனி, நீலகிரி, கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த சில நாட்களாக அந்த பகுதிகளை நல்ல மழையானது பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுவதோடு நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடியுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” தமிழகத்தில் இன்று மாலை 4 மணிக்குள்ளாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி மற்றும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.” என கூறப்பட்டுள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications