Chennai Rain: இன்றைக்கும் இரவில் வெளுத்து வாங்கிய மழை.. குளிர்ந்துபோன சென்னை.. மக்கள் ஹேப்பி
சென்னை: சென்னை (Chennai Rain) உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தொடர்ச்சியாக இன்று 4 வது நாளை இரவில் மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, தி நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், வடபழனி, பூந்தமல்லி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆரம்பத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. தொடர்ந்து வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது.

கடந்த 30 ஆம் தேதி இரவு சென்னையில் திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. ஒரே நாளை சென்னை மணலியில் மட்டும் 27 செமீ மழை பதிவானது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகும் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் இரவு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்தது.
வானிலை மையம் கூறியது போலவே இன்றும் சென்னையில் இரவில் மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சென்னை தி நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், கிண்டி, கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும், பூந்தமல்லி சுற்றுவட்டாரத்திலும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications