நீடிக்கும் கனமழை.. ஆறுகளில் வெள்ளம்.. செல்ஃபி எடுக்காதீங்க.. எச்சரித்த கோவை மாவட்ட கலெக்டர்
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கக் கூடாது என ஆட்சியர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார். குடிசைகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான, கணுவாய், தடாகம், சோமையனூர் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், பொன்னுத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் கணுவாய்- பன்னிமடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் ஓடுகிறது. வழக்கத்தை விட நேற்று இரவு அதிக அளவு மழை பெய்த காரணத்தால் இந்த தரைப்பாலத்தில் அதிகளவு வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துவருவதால் தற்பொழுது நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக கோவை தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தென்னம்மநல்லூர் பகுதியில் உள்ள நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கக் கூடாது என ஆட்சியர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து ஆட்சியர் கிராந்திகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். குடிசைகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் செல்ஃபி எடுக்கவோ, அருகில் செல்லவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
-
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications