அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதிகளில் எல்லாம் சம்பவம் இருக்கு! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதிகளில் எல்லாம் மழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி, பார்சன்ஸ் பள்ளத்தாக்கு மற்றும் முகூர்த்தி அணை பகுதிகளில் 24 மணி நேரத்தில் இரட்டை மற்றும் மூன்று சதங்கள் எளிதாக அடிக்கும் எனவும், குமரி மற்றும் மாஞ்சோலை பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிடமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழை தீவிரமாக இருந்தது. நேற்று மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களிளும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் மழை பெய்தது. அதிகபட்சமாக, நீலகிரியின் தாலுகா அலுவலகம் பந்தலூர் மற்றும் அவலாஞ்சியில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
இதேபோன்று நீலகிரியின் விண்ட் வொர்த் எஸ்டேட் பகுதியில் 6 செமீ மழை பெய்துள்ளது. இதுபோக கோவை, தென்காசி, குமரி, தஞ்சை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு குமரி, நெல்லையின் மாஞ்சோலை உள்பட பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்க இருப்பதாகவும், இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
கவனமாக இருக்க வேண்டும்
நீலகிரி, வால்பாறை ஆகிய இடங்களுக்கு இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிகப்பெரிய நாளாக இருக்கும். அதி தீவிர கனமழை இருக்கும். கன்னியாகுமரி, மாஞ்சோலை பகுதிகளில் கனமழை இருக்கும். கேரளா, காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், கடலோர கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும்.
பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பொழியும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி, பார்சன்ஸ் பள்ளத்தாக்கு மற்றும் முகூர்த்தி அணை பகுதிகளை பொறுத்தவரை 24 மணி நேரத்தில் இரட்டை மற்றும் மூன்று சதங்கள் எளிதாக அடிக்கும். இதனால், கவனமாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்
முன்னதாக இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று 14-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
அதிகனமழைக்கு வாய்ப்பு
நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
19 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
16-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
17-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
18-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 19-06-2025 மற்றும் 20-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் 2 நாட்களுக்கு எப்படி?
சென்னையில் இன்று (14-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (15-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications