கொட்டித்தீர்த்த கனமழை.. தவித்த சென்னைவாசிகள்.. தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்
சென்னை: அதிகாலை நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானத்தில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னை விமான நிலையம் அருகே கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக தரையிறங்க முடியாமல் 5 விமானங்கள் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மிதமான மழை பெய்தது. நள்ளிரவு நேரத்தில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சென்னை ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், ஆலந்தூர், கே கே நகர், ஜாபர்கான்பேட்டை, மேற்கு மாம்பலம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
காலை 7 மணி முதல் திடீரென கனமழை கொட்டியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். எதிர்பாராமல் மழை பெய்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மெட்ரோ ரயில் பாலத்திற்குக் கீழே ஒதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையம் அருகே பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்ததால், விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 5 விமானங்கள் வானத்திலேயே வட்டமடித்தன. சென்னை விமான நிலையத்தில் இருந்து 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன

இதனிடையே தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. குமரி மாவட்டம் களியல், திருப்பூர், நெல்லை மாவட்டம் நாலுமுக்கில் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications