சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை.. ஆவடி அருகே வெள்ளத்தில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதை!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. பெரம்பூர் சுரங்கப்பாதை மற்றும் ஆவடி சேக்காடு ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியது. தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக இரவு மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் மாலை ஒருசில இடங்களில் மழை பெய்தது. இதன்பிறகு இரவு 8 மணியளவில் மழை வெளுத்து வாங்கியது. இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

2 மணி நேரம்: சென்னை அண்ணாநகர், அடையாறு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, சைதாப்பேட்டை, திநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மழை வெளுத்து வாங்கியது. 2 மணி நேரம் விடாமல் மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இன்று காலை 8 மணி வரையும் மழை நீர் வடியாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மழை நீரை வெளியேற்றுமாறு மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூழ்கிய சுரங்கப்பாதை: கனமழை காரணமாக சென்னை ஆவடி அருகே சேக்காடு ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல தேங்கியது. தண்ணீர் வெளியேறாமல் இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது சேக்காடு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது.
சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் நேற்று பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி கூறியுள்ளது. சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் தேங்காததால் போக்குவரத்து சீராக இருப்பதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது. பெரம்பூர் சுரங்கப்பாதையில் தேங்கியிருக்கும் மழைநீரானது ஒரு மணி நேரத்திற்குள் வெளியேற்றப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.
மழை அளவு: நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை சென்னை அய்யப்பாக்கத்தில் அதிகபட்சமாக 13.4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அம்பத்தூரில் 12.6 செ.மீட்டரும், அண்ணாநகரில் 12.3 செ.மீட்டரும், திருவலங்காட்டில் 11.3 செ.மீட்டரும், மணலியில் 10 செ.மீட்டரும், பெரம்பூரில் 9.4 செமீட்டரும், கொளத்தூரில் 8.3 செ.மீட்டரும், செங்குன்றத்தில் 7.5 செ.மீ, ஊத்துக்கோட்டை 6.7 செ.மீ, திருத்தணி, சோழவரத்தில்ட் ஹலா 5 செ.மீட்டரும் மழை பெய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
10 மணி வரை: சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 7 செ.மீட்டரும், வில்லிவாக்கத்தில் 8 செ.மீட்டரும், செங்கல்பட்டில் 6 செ.மீட்டரும், எண்ணூரில் 5 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் இன்றும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications