ஊத்தங்கரையில் வெளுத்த கனமழை.. 50 செ.மீ ரெக்கார்டு.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஸ், லாரி!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணி நேரத்தில் 50 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. ஊத்தங்கரையில் நீர் நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி சாலையில் ஏரி நிரம்பி சாலையில் இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கி, இரவு 11.30 மணிக்கு கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தாலும் புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நீர் நிலைகள் நிரம்பி, வெள்ளம் ஏற்பட்டதால் பல மாவட்டங்களில் வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரை பகுதியில் 50.3 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் 33.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 32 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கன மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் சாலைகளில் பாய்ந்து ஓடி வருகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. மக்களின் உடைமைகள் சேதமடைந்துள்ளன.
கனமழை, வெள்ளம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே வாணியம்பாடி சாலையில் ஏரி நிரம்பி சாலையில் இருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பேருந்துகள், லாரி, கார்கள் ஆகியவை வெள்ள நீரில் கவிழ்ந்து கிடக்கின்றன. இன்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று கன முதல் மிக கனமழை பெய்யலாம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications