மலையாளக் கரையோரம் கைவரிசை காட்டும் மழை! அதிரடியாக உயரும் அணைகளின் நீர்மட்டம்! ஹாப்பி அண்ணாச்சி!
தேனி: கேரளா மற்றும் தேனியில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் தொடர் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடியும், வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.6 அடியும் உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17651.67 கன அடியாகவும், வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10347 கன அடியாகவும் உள்ளதால் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று கடற்கரையை நெருங்கி உள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது .தாழ்வான இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர் கனமழை பெய்தது. மேலும் நேற்று பகல் நேரத்திலும் விட்டுவிட்டு அவ்வப்போது பலத்த கனமழை பெய்தது.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து பத்து மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது.
நேற்று காலை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.65 அடியாக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து இன்று காலை ஆறு மணி நிலவரப்படி 127.65 அடியாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17651.67 அடியாகவும்,அணையின் நீர் இருப்பு 4190.40 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் முல்லைப்பெரியாறு அணையில் 52.20 மி.மீ, மற்றும் தேக்கடியில் 100 மி.மீ.மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல மூல வைகை ஆறு, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட ஆறுகளின் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக வைகை அணைக்கு அதிகப்படியான நீர் வரத் தொடங்கியதால் வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.6 அடி உயர்ந்து 55.25 அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று காலை 6 மணி அளவில் 49.67 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணியளவில் 55.25 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10347 கன அடியாகவும், நீர் இருப்பு 2759 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணைகளுக்கு அதிகப்படியான நீர் வந்து கொண்டிருப்பதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வரும் காலங்களில் 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு பிரச்சினை இருக்காது என்கின்றனர் அதிகாரிகள்..!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications