இன்று 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. சென்னை நிலை என்ன? 5 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு லீவ்
சென்னை: கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 மாவட்டங்களில் இன்று கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 3 தாலுகாக்களில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து தலைமை ஆசிரியரே முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளிகள் விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியரே முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அந்தந்தப் பகுதிகளில் மழை நிலவரம், மழைநீர் தேக்கம் ஆகிய சூழல்களைப் பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களே முடிவெடுக்கலாம் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கல்வி அதிகாரி கற்பகம் அறிவித்துள்ளார். முன்னதாக, பள்ளிகளில் மழைநீர் இருந்தால் சூழ்நிலையை பொறுத்து பள்ளி தலைமை ஆசிரியரே விடுமுறை விடுவது குறித்து முடிவு செய்யலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் கரையை கடக்கத் துவங்கி, அன்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. இது தொடர்ந்து வலுவிழந்து புதுச்சேரிக்கு அருகே நிலைகொண்டிருந்தது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்தெடுத்தது.
வானிலை ஆய்வு மைய தகவலின்படி, ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து கடலூருக்கு வடக்கே 30 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு கிழக்கே 40 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு - தென்மேற்கில் 120 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலோர மற்றும் சில உள் மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் புரட்டிப் போட்டுள்ளது. தொடர்ந்து பெய்த கனமழையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நீர் நிலைகள் நிரம்பி, ஊருக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பல மாவட்டங்களில் வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: இந்நிலையில் இன்றும் (டிசம்பர் 2) மழையும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
விழுப்புரம்
திருவண்ணாமலை
கடலூர்
கிருஷ்ணகிரி
கள்ளக்குறிச்சி
நீலகிரி (உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் மட்டும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)
நாமக்கல் (கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை)
செங்கல்பட்டு (செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை)
பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
வேலூர்
திருப்பத்தூர்
தருமபுரி
ராணிப்பேட்டை
சேலம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிவிப்பை தேர்வு கட்டுப்பாட்டாளர் கதிரவன் வெளியிட்டுள்ளார். மேலும் சென்னை பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பைக்கில் பள்ளிக்கு வரும் மாணவர்களா நீங்க? உஷார்.. தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு! -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications