Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய அளவில்.. அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு சம்பவம்.. மொத்த நாடே திரும்பி பார்க்குதே.. போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று வானிலை ரீதியாக நடந்த சம்பவம் ஒன்று தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக காலநிலை வல்லுனர்கள் இடையே இந்த சம்பவம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரில் நேற்று வெப்ப அலை நிலை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை அடித்தது. இதில் ஸ்ரீநகரில் அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இயல்பை விட 6 புள்ளிகள் அதிகமாகவும், 25 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை 1999 இல் நகரம் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது.

climate change


டெல்லி (31.7 டிகிரி செல்சியஸ்), கொல்கத்தா (31 டிகிரி செல்சியஸ்), மும்பை (32 டிகிரி செல்சியஸ்) மற்றும் பெங்களூரு (28 டிகிரி செல்சியஸ்) ஆகியவற்றை விட ஸ்ரீநகரில் வெப்பம் அதிகமாக இருந்தது. பள்ளத்தாக்கின் பிற பகுதிகளிலும் வெப்பமான வெப்பநிலை காணப்பட்டது, காசிகுண்டில் அதிகபட்சமாக 32.8 டிகிரி செல்சியஸ் மற்றும் குப்வாராவில் 35.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடுமையான வெப்பம்; ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெப்பச்சலனத்தை சமாளிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 8 முதல் 10 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.

climate change


வெயிலுக்கு மத்தியில், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க முடிவு செய்துள்ளனர். பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால் வெள்ளிக்கிழமை கொஞ்சம் வெயில் குறைய வாய்ப்பு உள்ளது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

காலநிலை மாற்றம்: தீவிரவாதம்.. சர்வாதிகாரம்.. வேலையின்மை.. வறுமை ஆகியவை உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றினாலும், அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை நாம் சத்தமின்றி எதிர்கொண்டு வருகிறோம். அதுதான் காலநிலை மாற்றம்!

உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.

ஐநாவும் இந்த காலநிலை மாற்றம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. அந்த அளவிற்கு உலகம் முழுக்க காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.

இந்த நிலையில்தான் காலநிலை மாற்றம் காரணமாக ஐஸ் கட்டிகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் நீர் மட்டம் வேகமாக உயரும்.இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+