சென்னை மழை வெள்ளத்தில் கார் மூழ்கிவிட்டதா? இன்சூரன்ஸை ஈஸியா கிளைம் செய்யலாமே! எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மழை வெள்ளத்தில் கார் மூழ்கிவிட்டால் இன்சூரன்ஸை எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மிக்ஜாம் புயலால் சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது. சென்னையின் போரூர், காரப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

How can we claim insurance for cars which drown in Chennai Flood 2023?

இதனால் அங்குள்ள குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மூழ்கி மேல் பகுதி மட்டுமே கண்களுக்கு தெரியும்படி இருக்கின்றன. எப்படியும் 4 அடி தண்ணீர் இருக்கும்.

அது போல் பள்ளிக்கரணை பகுதியில் நாராயணபுரம் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் வந்துவிட்டதால் கார்கள் பேப்பர் கப்பல் போல் மிதந்தன. எத்தனை லட்சங்கள் கொடுத்து கார் வாங்கினார்களோ! அத்தனையும் போச்சு!. சரி வெள்ள நீரில் மூழ்கிய கார்களுக்கு இன்சூரன்ஸ் எப்படி வாங்குவது என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து Film Food Fun & Fact என்ற ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மழை வெள்ளத்தில் கார் மூழ்கியதா? கவலைய விடுங்க!
வெள்ள நீரால் உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டால் அதற்கான இன்சூரன்ஸ் எப்படி வாங்குவது என்று பார்க்கலாம். உங்கள் வாகனம் மழை வெள்ள நீரில் மூழ்கி விட்டாலோ அல்லது மழை நீரில் அடித்து சென்று விட்டாலோ நீங்கள் முதலில் செய்ய வேண்டியது பொறுமை காப்பது மட்டும்தான்.

அவசரப்பட்டு காரின் அருகே சென்று காரின் கதவை திறக்க முயற்சி செய்யாதீர்கள். காரின் கதவை திறந்தால் வெள்ள நீர் இருக்கும்போது அது முழுவதும் கார் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. அதே நேரம் காரை ஸ்டார்ட் செய்யும் முயற்சி செய்ய வேண்டாம். தண்ணீர் வடிந்த பின்பு நீங்கள் உங்கள் காரை அருகில் உள்ள மெக்கானிக் அல்லது உங்கள் கார் ஷோரூம் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்வது நல்லது. ஆனால் அதற்கு முன்பாக வெள்ளநீர் எந்த அளவிற்கு உங்கள் காரில் நிரம்பி இருந்தது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் உங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை மெக்கானிக் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காட்ட வசதியாக இருக்கும். காருக்குள் வெள்ள நீர் சூழ்ந்து இருக்கும் போதே அதை புகைப்படம் எடுத்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி உங்கள் கார் இப்படியான சேதத்தை சந்தித்து விட்டது என்பதை முதல் முறையாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள். போன் செய்தோ, இ-மெயில் மூலமோ ஏதாவது ஒரு வகையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டியது உங்கள் முதல் கடமையாக இருக்கிறது.

அதன் பின்பு வெள்ளம் வடிந்த பின்பு வெள்ள நீரால் உங்கள் வாகனம் சேதம்மாகி இருந்தால் இது குறித்து நீங்கள் போலீசில் சென்று புகார் அளிக்க வேண்டும். அதன்படி போலீசார் உங்கள் புகாரை பெற்றுக் கொண்டு முதல் விசாரணை அறிக்கையை பதிவு செய்வார்கள். இதை அடிப்படையாகக் கொண்டுதான் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் காருக்கு ஏற்படும் சேதாரங்களுக்கான பணத்தை வழங்கும் இந்த எஃப்ஐஆர் என்பது முழுமையாக உங்கள் கார் சேதமானால் மட்டுமே தேவைப்படும்.

அதன் பின்பு உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் இன்சுரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள் மேலும் காரை ஸ்டார்ட் செய்யாமல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று அங்கு காருக்கு என்ன நேர்ந்தது என முழுமையாக ஆய்வு செய்து அதை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள்.

அதன் மூலம் அந்த காருக்கு ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய எவ்வளவு செலவாகும் என மதிப்பிடப்பட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதற்கான தொகையை உங்களுக்கு வழங்க முன் வரும். ஒருவேளை அதிகமான சேதம் ஏற்பட்டிருந்தால் முழுவதுமாக காரை ஸ்கிராப் செய்துவிட்டு, முழு இன்சூரன்ஸ் பணத்தையும் உங்களுக்கு வழங்க நிறுவனம் முடிவு செய்யலாம்.

இதற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி நேரில் வந்து உங்கள் வாகனத்தை பார்வையிட்டு அதில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல்களை எல்லாம் சேகரித்து செல்வார். வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்த பின் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் பணத்தில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் நீங்கள் அந்நிறுவனத்திடம் பேரம் பேசி அதிக தொகையை பெற முடியும். இறுதியாக நீங்கள் ஏற்றுக் கொண்ட பின்பே அந்த பணம் உங்களுக்கு வழங்கப்படும். குறிப்பு: எக்காரணத்தைக் கொண்டும் காரை ஸ்டார்ட் செய்யாதீர்கள். அதனால் இஞ்சின் பழுதானால் இன்சூரன்ஸ் அமௌன்ட் கிடைக்காது. இவ்வாறு அந்த ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+