வங்கக்கடல் ட்விஸ்ட்! தலைக்கு வந்தது.. தலைப்பாகையோடு போய்விட்டது.. சென்னை தப்பித்தது எப்படி?
சென்னை: சென்னைக்கு வந்த பெரிய பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது என்று சொல்வது போல சென்னைக்கு வந்த பிரச்சனை.. பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் அகன்று உள்ளது.
அரசு இயந்திரம் மிக தீவிரமாக இயங்கியது, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது, வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்று பல காரணங்களால் சென்னைக்கு வந்த பிரச்சனை.. பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் அகன்று உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. செங்குன்றம் 28 செ.மீ., ஆவடி 25 செ.மீ., தாமரைப்பாக்கம், பொன்னேரியில் தலா 16 செ.மீ. வெளுத்து வாங்கியது.
10 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு 440 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 460 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும், நெல்லூருக்கு 530 கி.மீ கிழக்கு - தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (காலை 11 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்படி தப்பித்தது?: சென்னைக்கு வந்த பிரச்சனை பாதியில் வெளியேறி உள்ளது. இதற்கு காரணம்.. காற்றழுத்த தாழ்வு மையம் கிழக்கு பக்கமாக புதுச்சேரியில் இருந்தது. அங்கிருந்து வட மேற்கு திசையில் நகர தொடங்கி உள்ளது. 10 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது தொடர்ந்து வடக்கு திசையில் நகரும். இப்படி நகர நகர.. மேகங்கள் ஆந்திர பிரதேசம் நோக்கி நகரும். ஆந்திர பிரதேசம் நோக்கி மேகங்கள் செல்லும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்காது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் கனமழை பெய்யும். பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
4 நாளைக்கு மழை தான்.. இன்னைக்கும் 14 மாவட்டங்களில் மழை பிச்சுக்கப் போகுது! ஐஎம்டி கொடுத்த அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications