கனமழைக்கு இடையே.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நடந்த சம்பவம்.. சட்டென கூட்டமாக போன போலீஸ்.. நெகிழ்ச்சி
சென்னை: தொடர் மழைக்கு இடையே நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் கனமழை பெய்யும். பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தண்ணீர் இல்லை: சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னையில் எந்த சுரங்க பாதையிலும் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
சென்னை மழைக்கு இடையே மாநகராட்சி துரித நடவடிக்கையால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுடக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையில் நேற்று பகல் முழுக்க மழை பெய்தும் கூட எங்கும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. சில இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கினாலும் போக்குவரத்து பாதிக்கும் அளவிற்கு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.
சென்னை: தொடர் மழைக்கு இடையே நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடைக்கலம் தேடிய நபர்களுக்கு, சென்னை மாநகர காவல்துறை சார்பில் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
அங்கே மக்கள் பலர் தஞ்சம் அடைந்துள்ளதை அறிந்து போலீசார் உணவுகளோடு அங்கே சென்றனர். பொதுவாக அங்கே மக்கள் தூங்க போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் நேற்று மழை கருதி.. அங்கே மக்கள் தங்க அனுமதிக்கப்பட்டது. பொதுவாக சாலை ஓரம் வசிக்கும் மக்கள் அங்கே தஞ்சம் அடைந்தனர்.
எங்கே உள்ளது?: அரசு இயந்திரம் மிக தீவிரமாக இயங்கியது, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது, வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்று பல காரணங்களால் சென்னைக்கு வந்த பிரச்சனை.. பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமல் அகன்று உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. செங்குன்றம் 28 செ.மீ., ஆவடி 25 செ.மீ., தாமரைப்பாக்கம், பொன்னேரியில் தலா 16 செ.மீ. வெளுத்து வாங்கியது.
10 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர தொடங்கி உள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications