திருவண்ணாமலை கோவில் எப்படி உள்ளது? கோவில் உள்ளே நிலைமை என்ன? டிரெண்டாகும் ரீல்ஸ்
திருவண்ணாமலை: கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இடையே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தற்போது எப்படி உள்ளது.. கோவில் உள்ளே இப்போது நிலைமை எப்படி உள்ளது என்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பரம் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. பெரிய பாறாங்கல் ஒன்று சறுக்கி வீடுகள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் ஆரணி அருகே செய்யாற்றில் தரைப்பாலம் உடைந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவை (7,321 மில்லியன் கன அடி) எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவில்: கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இடையே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தற்போது எப்படி உள்ளது.. கோவில் உள்ளே இப்போது நிலைமை எப்படி உள்ளது என்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவில் உள்ளே பாதத்திற்கு மேலே வரை தண்ணீர் தேங்கி உள்ளது. நடைபாதை முழுக்கவே தண்ணீர் தேங்கி உள்ளது. மேடாக இருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் தண்ணீர் முழுமையாக தேங்கி உள்ளது.
ஆனாலும் எப்போதும் போல பூஜை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கார்த்திகை மாதம் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்திற்கு குறைவு இல்லாமல் உள்ளது. மக்கள் நெரிசல் எப்போதும் போல காணப்படுகிறது. இணையத்தில் இது தொடர்பான ரீல்ஸ் டிரெண்டாகி வருகிறது.
இன்றும் திருவண்ணாமலையில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
புரட்டி போட்ட மழை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23 இடங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீ, தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தலில் 32 செ.மீ, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 23 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது.
மோசமான நிலைமை: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாணி ஆற்றில் 20 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாநில பேரிட மீட்புப் படையினர் அங்கே மக்களை மீட்டு முகாமிற்கு அழைத்து சென்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் கோரத்தாண்டவம் ஆடி உள்ளது. திடீர்குப்பம், குண்டுசாலை, செம்மண்டலம், வெளிச்செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications