ஐயோ வெயில் கொளுத்துதே! சீலிங் ஃபேனிலேயே 12ம் நம்பரில் வச்சது போல் காற்று வீச வேண்டுமா? இதை செய்ங்க!
சென்னை: சீலிங் ஃபேனில் நல்ல காற்று வர வேண்டும் என்றால் தரையிலிருந்து எவ்வளவு அடி உயரத்தில் அந்த ஃபேனை தொங்க விட வேண்டும் தெரியுமா?
தமிழகத்தில் கோடை வெப்பம் தகித்து வருகிறது. இதனால் 24 மணி நேரமும் ஏசியில் இருந்தால் கூட உடலுக்கு குளிர்ச்சி போதவில்லை. நீர் யானை போல் எப்போதும் தண்ணீருக்குள்ளேயே இருக்கலாமோ என தோன்றுகிறது.

குளித்துவிட்டு வந்தால் சர்ரென ஈரம் காய்ந்து உடனே உடல் உஷ்ணமாகிவிடுகிறது. ஏசியும் 24 மணி நேரமும் ஓடி கொண்டிருந்தால் கரென்ட் பில் எகிறும். என்னதான் இன்வர்ட்டர் ஏசி என்றாலும் கரென்ட் பில் அதிகரிக்கும்.
நிறைய நேரம் ஏசியை இயங்க விடுவது சுற்றுச்சூழலுக்கும் நன்மை இல்லை. இதனால் ஏசி இயங்காத நேரங்களில் சீலிங் ஃபேனை இயக்கிக் கொள்ளலாம். அதிலும் வடிவேல் காமெடி போல் ஐயோ எரியுதுடி மாலா ஃபேனை 12 ஆம் நம்பர்ல வை என சொல்லும் அளவுக்கு ஃபேன் காற்றும் சரியாக இயங்கவில்லை.
அப்படியென்றால் சீலிங் பேனை நீங்கள் சரியாக மாட்டவில்லை என்று அர்த்தம். இந்த சீலிங் ஃபேன்கள் ஏசியின் பயன்பாட்டை குறைப்பதற்காக உதவும். சீலிங் ஃபேனில் இருந்து அதிக காற்று வேண்டுமானால் குறிப்பிட்ட உயரத்தில் பொருத்துவது கட்டாயம் ஆகும். இதன் மூலம் காற்றும் சரியாக வரும்.
பாதுகாப்பு காரணங்களும் உண்டு. அறையில் சீலிங் ஃபேனை எவ்வளவு உயரத்திற்கு தொங்கவிட வேண்டும் என்பது பலருக்கு தெரியாது. தரையிலிருந்து 8 முதல் 9 அடி உயரத்தில் தொங்கவிடப்பட வேண்டும். இந்த உயரத்தில் பொருத்தினால் அந்த அறைக்கே அதிக காற்றோட்டத்தை கொடுக்கும்.
சீலிங் ஃபேன் எப்போதும் உச்சவரம்புக்கு கீழே குறைந்தது 8 அங்குலங்கள் இருக்க வேண்டும். மிக உயரமாக பொருத்தினால் ஃபேன் வேகமாக சுற்றினாலும் காற்று குறைவாகவே வரும். அனல் அடிக்கும். எனவே அதிக காற்று வர வேண்டும் என்றால் 7 அடி, 6 அடியில் சீலிங் ஃபேனை பொருத்தினால் கைகளில் படும். எப்போதும் தொடும் உயரத்தில் ஃபேன்களை பொருத்தக் கூடாது.
இதனால்தான் 8 அடி அல்லது 9 அடி உயரத்தில் பொருத்த வேண்டும் என்கிறார்கள். சீலிங் ஃபேனையும் எப்போது அறையின் நடுபகுதியில்தான் மாட்ட வேண்டும். மின் விசிறியின் இறக்கைகளில் நிறைய தூசு ஏற்படாத அளவுக்கு வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது துடைக்க வேண்டும். அந்த தூசுக்கள் கூட ஃபேனை மெதுவாக இயக்கலாம். எனவே சீலிங் ஃபேனை இப்படி வைத்து கொண்டு பயன்படுத்துங்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications